உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டை தவறாக வழிநடத்துகிறார் : ஓவைசி பாய்ச்சல்

தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கைதான் தேசிய மக்கள் தொகை பதிவேடு என்று ஐதராபாத் எம்.பி ஓவைசி தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-25 04:18 GMT
ஐதராபாத்,

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமித்ஷா, 'தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து நாடு முழுவதும் விவாதம் நடத்த தேவையில்லை. அதுபற்றி மத்திய அரசும் விவாதிக்கவில்லை. இதுதொடர்பாக பிரதமர் மோடி அளித்த விளக்கம் முற்றிலும் சரியே.
தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

இந்த நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக அமித்ஷா கூறுவது பொய் எனவும் அவர் நாட்டு மக்களை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாகவும் ஐதராபாத் எம்.பி அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார். இது குறித்து ஓவைசி கூறுகையில், “, 1955 சட்டத்தின் படியே தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுக்கும் பணியை தொடங்க உள்ளனர். பிறகு எப்படி? என்.ஆர்.சிக்கு தொடர்பு இல்லாமல் இருக்கும்.

உள்துறை அமைச்சர் ஏன் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார். பாராளுமன்றத்தில் எனது பெயரை குறிப்பிட்டு  நாடு முழுவதும் என்ஆர்சி., (தேசிய குடிமக்கள் பதிவேடு)அமல்படுத்தப்படும் என்றார். என்.ஆர்.சியின் முதல் படிதான் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்)  2020 ஏப்ரலில் என்பிஆர் கொண்டு வரப்பட்டால் அதிகாரிகள் ஆவணங்களை கேட்க துவங்குவர். அதன் இறுதி பட்டியல் என்.ஆர்.சியாக இருக்கும்” என்றார்.

மேலும் செய்திகள்