145 நாட்களுக்கு பிறகு கார்கில் பகுதியில் மீண்டும் இணையதள சேவை

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் பகுதியில் 145 நாட்களுக்கு பிறகு மீண்டும் இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-27 08:08 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக வதந்திகள் பரவி வன்முறைகள் வெடிக்கலாம் என்பதால், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இணையதள சேவை முடக்கப்பட்டது.  உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி  உள்ளிட்ட  முக்கிய அரசியல் தலைவர்கள்  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

தற்போது, அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும், பதற்றமான பகுதிகளில் மட்டும் இணையதள சேவை  வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் பகுதியில் 145 நாட்களுக்கு பிறகு மீண்டும் இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது.  இணையதள சேவையை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்