காவலர்களை மீறி வந்த தொண்டரிடம் பிரியங்கா காந்தி காட்டிய பரிவு

காவலை மீறி வந்த தொண்டரிடம் பாதுகாவலர்களை அப்புறப்படுத்தி விட்டு பரிவோடு பிரியங்கா காந்தி விசாரித்தார்.

Update: 2019-12-28 09:19 GMT
 லக்னோ

உத்தரபிரதேசம் லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் நிறுவன நாள்  கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா வந்து  நிர்வாகிகளுடன் அமர்ந்து இருந்தார். அப்போது ஒரு தொண்டர் பாதுகாவலர்களை மீறி பிரியங்கா காந்தி அருகே சென்றார். அப்போது  பாதுகாவலர்கள் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். உடனே பிரியங்கா காந்தி பாதுகாவலர்களை  அருகில் வரவேண்டாம் என கூறிவிட்டு தொண்டரிடம் பரிவோடு அவரின் கோரிக்கைகளை  கேட்டறிந்து பின்னர் அவரிடம் கை குலுக்கி அனுப்பி வைத்தார்.

கூட்டத்தில் பேசும்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநிலத்தின் பிற எதிர்க்கட்சிகள் அதிகம் பேசவில்லை. ஆனால் நான் சொன்னது போல், நாங்கள் தனியாக செல்ல வேண்டியிருந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம், தொடர்ந்து குரல் எழுப்புவோம்  அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு செல்ல நாம் தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.

#WATCH Man breaches security of Priyanka Gandhi Vadra at a party event in Lucknow on Congress foundation day, gets to meet her. pic.twitter.com/v4UtwedMF2

மேலும் செய்திகள்