அரசு மருத்துவமனையில் 77 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு

ராஜஸ்தான் மாநிலம் கோடா அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 77 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2019-12-28 17:29 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் கோடா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அதிக அளவில் உயிரிழப்பதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை குழுவின் ஆய்வு அறிக்கையில், டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 குழந்தைகள் பிறந்த உடன் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லாததும், தொற்று பாதிப்பு உள்ளிட்டவைகளே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உண்மை நிலவரத்தை கண்டறிய ஜெய்ப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கோடா மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மேலும் இதுகுறித்து விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக, அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்