119 ஆண்டுகளில் இல்லாத அளவு குளிரில் நடுங்கிய டெல்லி

119 ஆண்டுகளில் இல்லாத அளவு தலைநகரில் நேற்று இதுவரை கண்டிராத குளிராக இருந்தது.

Update: 2019-12-31 05:44 GMT
புதுடெல்லி: 

இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடுமையான குளிர்ச்சியால் பாதிக்கப்பட்ட  டெல்லி மக்களுக்கு நேற்று மேலும் கடுமையான வானிலை அதிர்ச்சி ஏற்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை வெறும் 9.4 டிகிரி செல்சியசாக குறைந்தது.  இது 119  ஆண்டுகளில்  தலைநகரில் இதுவரை கண்டிராத குளிராக  இருந்தது.

டெல்லியின்  வடக்கு சமவெளிகளின் பிற பகுதிகளையும் நேற்று சூழ்ந்திருந்த பனிமூட்டத்தின் அடர்த்தியான போர்வை சூரிய ஒளியை நிலத்தை  அடைவதைத் தடுத்தது. இப்பகுதி ஏற்கனவே கடுமையான குளிர்ந்த சூழ்நிலையில் தத்தளித்த நிலையில், காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக மூடுபனி அதிகமாக இருப்பதால் நாள் வெப்பநிலை முன்னோடியில்லாத அளவிற்கு குறைந்து காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் 650 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாயின.  40 விமானங்கள்  ரத்து செய்யப்பட்டன.

வடமேற்கு டெல்லியில் உள்ள முங்கேஷ்பூரில் 7.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக  இருந்தது.  அதே நேரத்தில் நஜாப்கர் மற்றும் ஜாபர்பூர் 8.2 டிகிரி செல்சியசாக இருந்தது. 

நேற்று சஃப்தர்ஜங்கில்  குறைந்தபட்ச வெப்பநிலை 9.4 டிகிரி செல்சியஸ் 1901 ஆம் ஆண்டை அடுத்து  சஃப்தர்ஜங் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த நாள் வெப்பநிலை  இதுவாகும்.

முந்தைய மிகக் குறைந்த அதிகபட்ச  வெப்பநிலை ஜனவரி 2, 2013 அன்று பதிவான 9.8 டிகிரி செல்சியஸ் ஆகும் ” என்று இந்திய வானிலை மைய தலைவர் ஆர்கே ஜெனமணி கூறினார்.

மேலும் செய்திகள்