தேசிய கொடி ஏந்தி மைனஸ் 20 டிகிரி குளிரில் குடியரசு தினம் கொண்டாட்டம்

காஷ்மீரின் லடாக்கில் 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசிய கொடியுடன் இந்தோ-திபெத் எல்லை போலீசார் குடியரசு தினத்தினை கொண்டாடினர்.

Update: 2020-01-26 03:59 GMT
லடாக்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அதிக குளிரையும் பொருட்படுத்திடாமல் தேசிய கொடியுடன் இந்தோ-திபெத் எல்லை போலீசார் குடியரசு தினத்தினை இன்று கொண்டாடினர்.

அவர்கள் மூவர்ண கொடியை ஏந்தியபடி பனி படர்ந்த மலையில் வரிசையாக நடந்து சென்று குடியரசு தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்பு ஒரே வரிசையில் நின்றபடி பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் என்ற கோஷங்களையும் முழங்கினர்.

மேலும் செய்திகள்