குடியரசு தினம் கொண்டாட எதிர்ப்பு: மாவோயிஸ்டு கல்லால் அடித்துக்கொலை; ஒடிசாவில் பரபரப்பு

குடியரசு தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்த மாவோயிஸ்டு கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-01-26 18:30 GMT
புவனேசுவரம்,

ஒடிசா மாநிலம், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலமாகும்.

இங்கு மார்கன்கிரி மாவட்டம், ஜந்துரை கிராமத்துக்கு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் 2 மாவோயிஸ்டுகள் வந்தனர்.

அவர்கள் அங்குள்ள மக்களை சந்தித்து, குடியரசு தினம் கொண்டாடக்கூடாது என கூறி எச்சரித்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அவர்கள் மீது சரமாரியாக கல் வீசி தாக்கினர்.

இதில் ஒருவர் கொல்லப்பட்டார். எஞ்சிய மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவர் கிராம மக்களால் பிடிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவோயிஸ்டுகள் கும்பலாக வந்து அந்த கிராமத்தில் உள்ள 15 வீடுகளுக்கு தீ வைத்தனர்.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக சம்பவ பகுதியில் கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்