நாக்பூரில் புதிய மெட்ரோ வழித்தடம் -பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

நாக்பூரில் புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார்.

Update: 2020-01-27 07:20 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் கடந்த 2014-ம் ஆண்டு மெட்ரோ வழித்தடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த வழித்தடத்தை பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார். வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் இதனை அவர் திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்ட ‘ஆரஞ்ச் லைன்’ என்று அழைக்கப்படும் காப்ரி முதல் சிதாபுட்லி வரையிலான முதற்கட்ட வழித்தடத்தை ஏற்கனவே பிரதமர் மோடி தான் திறந்து வைத்தார்.

‘அக்வா லைன்’ என்று அழைக்கப்படும் இரண்டாம் கட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், அதையும் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த மெட்ரோ பாதை 11 கிலோமீட்டர் நீளம் கொண்டது. நாக்பூரில் லோக்மண்யா நகர் முதல் சீதாபுல்டி வரையுள்ள அனைத்து நிறுத்தங்களிலும் மெட்ரோ ரெயில் நின்று செல்லும்.

நாடு முழுவதும் உள்ள வளர்ந்து வரும் முக்கிய நகரங்களில் மெட்ரோ வழித்தடங்கள் பல்வேறு கட்டங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்