மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 680 புள்ளிகள் சரிவு

மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் குறியீடு 680 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.

Update: 2020-02-01 08:56 GMT
மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது, சென்செக்ஸ் குறியீடு 279.01 புள்ளிகள் குறைந்து 40,444.48 புள்ளிகளாக இருந்தது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 81.42 புள்ளிகள் சரிவடைந்து 11,880.65 புள்ளிகளாக உள்ளது.  2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.  இதனை அடுத்து பங்கு சந்தை சரிவை சந்தித்து உள்ளது.

மும்பை பங்கு சந்தையில் இன்று நண்பகல் 12 மணியளவில் 55 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீடு 40,779.16 புள்ளிகளாக இருந்தது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 13.80 புள்ளிகள் உயர்வடைந்து 11,975.90 புள்ளிகளாக இருந்தது.

இந்நிலையில், மதியம் 1.30 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 680 புள்ளிகள் குறைந்தது.  நிப்டி குறியீடு 200 புள்ளிகள் சரிவடைந்தது.

மேலும் செய்திகள்