டெல்லி வன்முறை திட்டமிட்டே நடத்தப்பட்டது: மத்திய மந்திரி குற்றச்சாட்டு

டெல்லி வன்முறை திட்டமிட்டே நடத்தப்பட்டது என மத்திய மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-02-25 22:45 GMT
ஐதராபாத்,

டெல்லி வடகிழக்கு பகுதியில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 13 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து மத்திய உள்துறை இணை மந்திரி கிஷண் ரெட்டி கூறியதாவது:-

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவுக்கு வந்திருக்கும் சமயத்தில் இதுபோன்ற வன்முறை நடந்தது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் தீவைப்பதும், வன்முறையில் ஈடுபடுவதும் முற்றிலும் தவறானது. இது திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறைக்கு பின்னால் உள்ளவர்களை நான் எச்சரிக்கிறேன், மோடி அரசு இதுபோன்ற வன்முறைகளை துளியளவும் சகித்துக்கொள்ளாது. மத்திய அரசு இதுதொடர்பாக தேவையான, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். எந்த வடிவிலான வன்முறையையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாது என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்