நீதிபதி இடமாற்றம் வழக்கமான ஒன்றுதான், ஒப்புதல் பெறப்பட்டது ; சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம்

நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் வழக்கமான ஒன்றுதான் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Update: 2020-02-27 06:11 GMT
புதுடெல்லி,

டெல்லி உயர்நீதிமன்றத்தின் 3-வது மூத்த நீதிபதியான முரளிதர், பஞ்சாப் - அரியானா மாநில உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நேற்று இரவு 11 மணிக்கு பிறப்பிக்கப்பட்டது.  டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதி, திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

இந்த நிலையில், நீதிபதி முரளிதர் இடமாற்றம் வழக்கமான பணிதான் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அளித்த பரிந்துரையின் படியே , நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் நடைபெற்றது. பணியிட மாற்றத்தின் போது, சம்பந்தப்பட்ட நீதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது.  நீதிபதி பணியிட மாற்றத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. வழக்கமான பணியிட மாற்றங்களை காங்கிரஸ் அரசியலாக்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்