கேரளாவில் பறவை காய்ச்சல் பரவும் அபாயம்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2020-03-07 20:25 GMT

கோழிக்கோடு,

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. கோழிக்கோடு மாவட்டம் கொடியத்தூர் மற்றும் வேங்கிரி பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகள் எச்.பி.ஏ.ஐ. வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் வந்தது. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், கொடியத்தூர், வேங்கிரி பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அந்த பகுதி பண்ணை களில் உள்ள கோழிகளும் மற்ற வளர்ப்பு பறவைகளும் அதற்கு 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்ணைகளில் உள்ள பறவைகளும் உடனடியாக கொன்று புதைக்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்