8 மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது - காங்கிரஸ்

காங். பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் உட்பட 8 மாநிலங்களவைக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Update: 2020-03-12 16:29 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவி காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.

காலியாகவுள்ள 55 இடங்களுக்கு வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் போட்டியிட  6 ஆம் தேதியில் இருந்து வேட்பு மனுவை தாக்கல் தொடங்கி உள்ளது. நாளையுடன் 13 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில்  மத்திய பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கான மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து காங்., கட்சியின் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மராட்டியம், மேகாலயா மற்றும் ராஜஸ்தான், குஜராத், அரியானா ஆகிய 8  மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில், போட்டியிடும் வேட்பாளர்கள் மாநிலம் மற்றும் பெயர் வருமாறு:-

சட்டீஸ்கர்: கே.டி.எஸ்.துளசி, புலோ தேவி நேதம்

ஜார்கண்ட்: ஷாசதா அன்வர்

மத்திய பிரதேசம்: திக் விஜய் சிங், பூல் சிங் பாரையா

மராட்டியம்: ராஜிவ் சதேவ்

மேகாலயா: கென்னடி கொர்னிலியஸ் ஹேயியம்

ராஜஸ்தான்: கே.சி.வேணு கோபால், நீரஜ் டாங்கி.

குஜராத்: சக்தி சிங் கோஹில் & பாரத்சிங் சோலங்கி. 

அரியானா:  தீபந்தர் சிங் ஹூடா.

மேலும் செய்திகள்