திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் நேரடி தரிசனம்: வரிசையில் காத்திருக்க தேவையில்லை

திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-03-17 20:04 GMT
திருமலை,

கொரோனா வைரஸ் எதிரொலியாக திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் புதிய ஏற்பாட்டை செய்து இருந்தது. இதற்கான ஒரு அடையாள கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கார்டு உள்ளவர்கள் இவ்வாறு நேரடி தரிசனத்துக்கு அனுமதிக்கபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பக்தர்கள் திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருக்க வேண்டாம். அவர்கள் உடனடியாகக் கோவிலுக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் தேதியை மாற்றிக்கொள்ளலாம். பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்த 300 ரூபாய் டிக்கெட்டை ரத்து செய்தும் கொள்ளலாம். அதற்கான பணம் பக்தர்களுக்கு திருப்பி வழங்கப்படும். மே மாதம் 31-ந்தேதி வரை 300 ரூபாய் டிக்கெட் மாற்றம், ரத்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

மேலும் செய்திகள்