பீமா கொரேகான் கலவர வழக்கு; சரத் பவாருக்கு ஆணையம் சம்மன்

பீமா கொரேகான் கலவர வழக்கு தொடர்பாக, சரத் பவாருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Update: 2020-03-18 20:38 GMT
புனே,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் பீமா கொரேகான் என்ற இடத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி மகர் என்ற சமூகத்தினர் ஒன்று திரள்வது வழக்கம். அதுபோல், 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அவர்கள் ஒன்று திரண்டபோது, சமூக விரோதிகள் கல் வீசி தாக்கியதில் ஒரு இளைஞர் பலியானார். அதைத்தொடர்ந்து வன்முறை மூண்டது. இந்த கலவரத்தை விசாரிக்க மும்பை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஜே.என்.படேல் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கமிஷன் முன்பு சாட்சியாக ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவரை சாட்சியாக ஏப்ரல் 4-ந்தேதி தங்கள் முன்பு ஆஜராகுமாறு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது.

மேலும் செய்திகள்