கொரோனாவால் பள்ளிகள் அடைப்பு: மாணவர்களுக்கு மதிய உணவு எப்படி வழங்கப்படுகிறது? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

கொரோனாவால் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிய உணவு எப்படி வழங்கப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-03-18 21:15 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரசில் இருந்து மாணவ-மாணவிகளை பாதுகாப்பதற்காக தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வருகிற 31-ந்தேதி வரை பள்ளிகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் மதிய உணவு திட்டத்தை நம்பி வாழும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, ‘பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்கு மதிய உணவு எவ்வாறு வழங்கப்படுகிறது?’ என பதிலளிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதற்கிடையே பள்ளிகள் அடைக்கப்பட்டிருக்கும் கேரளாவில், மதிய உணவுத்திட்டத்தில் பங்கேற்று வரும் மாணவர்களுக்கு வீடு வீடாக சென்று மதிய உணவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்