மத்திய பிரதேச முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கமல்நாத் அறிவிப்பு

மத்திய பிரதேச முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கமல்நாத் அறிவித்துள்ளார்.

Update: 2020-03-20 07:10 GMT
போபால்,

மத்திய பிரதேசத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் தங்கள் ராஜினாமா கடிதங்களை கவர்னருக்கு அளித்ததை தொடர்ந்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 10 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்,  மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்திய முதல் மந்திரி கமல்நாத், நண்பகலில் செய்தியாளர்களை சந்தித்தார்.  செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பாஜகவை கடுமையாக  சாடிய கமல்நாத், முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா  செய்வதாக அறிவித்தார். 

மேலும் செய்திகள்