உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்-மாயாவதி வற்புறுத்தல்

உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-26 01:07 GMT
லக்னோ, 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாள் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்க வேண்டும் என்று உ.பி. முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி வற்புறுத்தி இருக்கிறார்.இந்தக் கருத்தை அவர் டுவிட்டரில் பதிவு செய்து இருக்கிறார்.

மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், “சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு கண்காணிக்கப்படுகிறது. உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் இந்த இக்கட்டான நேரத்தை லாப நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது” என்று எச்சரித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்