கொரோனா ஊரடங்கு: "சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது" மத்திய அரசுக்கு ராகுல்காந்தி பாராட்டு

கொரோனா ஊரடங்கு மத்திய அரசு சரியான திசையின் முதல் படியில் சென்று கொண்டு இருப்பதாக ராகுல்காந்தி கூறி உள்ளார்.

Update: 2020-03-26 11:46 GMT
புதுடெல்லி

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கை மீறி வெளியில் அவசியம் இன்றி சுற்றுவோரை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். 

கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கிற்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கை வரவேற்று கடிதம் எழுதியுள்ளார். 

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வெளியிட்டு உள்ள டுவிட்டில் மத்திய அரசு சரியான் திசையில் சென்று கொண்டு இருப்பதாக பாராட்டி உள்ளார்.

"நிதி உதவி தொகுப்பு பற்றிய மத்திய அரசின் அறிவிப்பு, சரியான திசையின் முதல் படியாகும். இந்தியா தனது விவசாயிகள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது, என அதில் அவர் கூறி உள்ளார்.

முன்னதாக நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும்.கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். 

மேலும் செய்திகள்