ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டிய பெண் சாமியார்; வாள் கொண்டு மிரட்டினார்; தடியடி நடத்திய போலீசார்

ஊரடங்கை மீறி கூட்டத்தை கூட்டிய பெண் சாமியாரை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

Update: 2020-03-26 12:31 GMT
லக்னோ

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஜனதா ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி மக்கள் ஒன்று கூடவோ வெளியில் சுற்றவோ தடை நீடித்து வருகிறது.

தடையை மீறி வெளியே சுற்றி திரிபவர்களை போலீசார் தடி கொண்டு அடித்தும்,மிரட்டியும் அனுப்பி வருகின்றனர் 

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் லக்னோவிலிருந்து கிட்டத்தட்ட 300 கி.மீ தூரத்தில் உள்ள தியோரியாவில் உள்ள மெஹ்தா பூர்வா பகுதியில் ஒரு பெண் சாமியார் தனது வீட்டில் மத நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.
அதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்டுள்ளனர். சாமியாரின் வீட்டிலேயே நடந்த கூட்டத்தை கலைக்கும்மாறு போலீசார் வந்து அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், அந்த சாமியார் கேட்கவில்லை

தொடர்ந்து போலீசார் அங்கு கூடியவர்களிடம் கலைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், ஆவேசத்தில்  பெண் சாமியார் வாள் எடுத்து சுழற்றி போலீசாரை மிரட்டி உள்ளார். இதனால், பொறுமை இழந்த போலீசார் அந்த பெண் சாமியாரை அடித்து விரட்டி உள்ளனர்.

மேலும், அங்கு கூடியிருந்த அந்த சாமியாரின் பக்தர்களையும் தடியடி நடத்தி விரட்டி உள்ளனர். இதனால், அவர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளனர். போலீசார் பெண் போலீசாரையும் அங்கு குடியிருந்த சிலரையும்  கைது செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்