மாதாந்திர கடன் தவணைகள் தள்ளிவைப்பு: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்றதாக உள்ளது - ப.சிதம்பரம் கருத்து

மாதாந்திர கடன் தவணைகள் தள்ளிவைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு தெளிவற்றதாக உள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-27 21:30 GMT
புதுடெல்லி, 

ரிசர்வ் வங்கி, கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்காக சில அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-

மக்களிடையே அதிக பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து இருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் கடன்களுக்கான மாதாந்திர சுலப தவணை (இ.எம்.ஐ.) தேதி தள்ளிவைத்திருப்பது தெளிவற்றதாகவும், அரைமனதுடன் அறிவிக்கப்பட்டதாகவும் உள்ளது. 

கடன் வாங்கியவர்கள் வங்கிகளை சார்ந்து செயல்படுவதால் அவர்கள் மேலும் ஏமாற்றம் அடைய நேரிடும். நான் கேட்பது, ஜூன் 30-ந் தேதிக்கு முன்னதாக வரும் அனைத்து சுலப தவணைகளையும் ஜூன் 30-ந் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்