ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி

ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-29 05:53 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி  இன்று காலை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றது. 

மக்கள் நம்பிக்கையுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும்.  ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவுக்கு தீர்வு உள்ளது. பயப்பட வேண்டாம். மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வீர வணக்கம். 

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்கு சேவை செய்பவர்கள் ஹீரோக்கள். கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுபாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் புரிகிறது. இந்த சூழலில் வேறு வழியில்லை” என்றார்

மேலும் செய்திகள்