மருத்துவர்களின் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மருத்துவர்களின் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Update: 2020-04-02 08:07 GMT
கேரள உயர் நீதிமன்றம்
திருவனந்தபுரம்,

ஊரடங்கு உத்தரவால்  மது கிடைக்காத விரக்தியில் கேரளாவில் சிலர்  தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின் படி, மதுபானம் வழங்க கேரள அரசு முடிவு செய்தது. ஆனால், அரசின் இந்த அறிவிப்புக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 இதற்கிடையே, அரசின் அறிவிப்புக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மருத்துவர் பரிந்துரையின் படி மதுபானம் வழங்க அனுமதி அளித்த அரசின் முடிவுக்கு 3 வாரங்கள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்