ககன்யான் திட்டம்: இந்திய வீரர்கள் 25% பயிற்சியை நிறைவு;கொரோனாவால் பயிற்சி நிறுத்தம்

ககன்யான் திட்டம்: இந்திய வீரர்கள் 4 பேரும் 25% பயிற்சியை நிறைவு செய்து உள்ளனர் என ரஷ்ய நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-04-07 08:37 GMT
புதுடெல்லி

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் 4 பேரும் 25 சதவீத பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ரஷ்ய நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீரர்களுக்கும் பயிற்சி அளிக்க ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் ராஸ்காஸ்மாசின் (Roscosmos) துணை நிறுவனமான க்ளாவ்காஸ்மாசுடன் (Glavkosmos) இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டது.
4 வீரர்களும் கடந்த வாரம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கலத்தின் செயல்பாட்டு அமைப்பு குறித்த தேர்வில் வெற்றி பெற்றதாகத் தெரிவித்தார்.ரஷ்யாவின் யூரி ககாரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.நான்கு விண்வெளி வீரர்களும் 11 மாதங்களுக்கு பயிற்சி பெறுவார்கள். 

மேலும் ரஷ்யாவில் கொரோனா முன்னெச்சரிக்கையாக நடைமுறையில் உள்ள ஊரடங்கும் தனிமைப்படுத்தலும் இந்திய விண்வெளி வீரர்களுக்கு உறுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அடுத்த கட்டப் பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் ஏப்ரலுக்குப் பிறகே மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். 

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு மனிதர்களை விண்வெளியில் அனுப்பும் 4 வது நாடாக இந்தியா மாறும்.1984 ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் ராகேஷ் சர்மா ஆவார். இருப்பினும், ரஷ்ய விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதியாக ரஷ்ய விண்கலத்தில் பயணம் செய்தார்.

மேலும் செய்திகள்