பஞ்சாப்பில் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முடிவு : முதல்வர் அமரீந்தர் சிங்

பஞ்சாப்பில் ஊரடங்கின் போது, தினமும் 4 மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

Update: 2020-04-29 10:13 GMT
சண்டிகார், 

கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மே 30 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தியிருந்த நிலையில், தேசிய அளவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், ஊரடங்கு முடித்துக்கொள்ளபடுமா? அல்லது மேலும், நீட்டிக்கப்படுமா? என்பது பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. ஊரடங்கு தொடர்பாக கடந்த 27 ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியிருக்கிறார். 

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மே 3 ஆம் தேதிக்கு பிறகு மேலும் 2 இருவாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக அம்மாநில முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.  ஊரடங்கின் போது, தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை என 4 மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும், இந்த சமயத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. கடைகளும் திறந்து இருக்கும் என்றும் அமரீந்தர் சிங் கூறினார். 

மேலும் செய்திகள்