கேதார்நாத் ஆலய நடை திறப்பு - மோடி சார்பில் முதல் பூஜை

கேதார்நாத் கோவிலின் நடை திறப்பின்போது, பிரதமர் மோடி சார்பில் முதலாவது ருத்ராபிஷேக பூஜை செய்யப்பட்டது

Update: 2020-04-29 20:45 GMT
டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவாலயங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை பனி காரணமாக, 6 மாதங்கள் மூடப்பட்டு இருக்கும். ஏப்ரல்-மே மாதங்களுக்கு இடையே அக்கோவில்கள் திறக்கப்படும்.

அதன்படி, கேதார்நாத் கோவிலின் நடை நேற்று காலை திறக்கப்பட்டது. 10 குவிண்டால் பூக்களால் கோவில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் கமிட்டி ஊழியர்கள், நிர்வாக அதிகாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி சார்பில் முதலாவது ருத்ராபிஷேக பூஜை செய்யப்பட்டது. தலைமை அர்ச்சகர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால், வேறொரு அர்ச்சகர் பூஜை செய்தார்.

மேலும் செய்திகள்