பயங்கரவாதிகளுடனான மோதலில் 5 வீரர்கள் மரணம்- பிரதமர் மோடி இரங்கல்

பயங்கரவாதிகளுடனான சண்டையில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-03 10:18 GMT
புதுடெல்லி,

காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து நடந்த பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜர், கர்னல் உள்பட 5 பேர் வீரமரணமடைந்தனர். பயங்கரவாதிகள்  இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கர்னல் அசுடோஷ் சர்மா, மேஜர் அனுஜ் உள்பட ஜம்மு காஷ்மீர் போலீஸ் காவல் துணை ஆய்வாளர் சகீல் குவாஸி உள்ளிட்ட 5 பேர்  பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், பயங்கரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்  கூறியிருப்பதாவது;- “ ஹந்த்வாராவில் வீர மரணம் அடைந்த வீரமிக்க நமது வீரர்களுக்கும்  பாதுகாப்பு படையினருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். 

தேசத்துக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.  நாட்டு மக்களை பாதுகாக்க ஓய்வின்றி உழைத்தனர். வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்