காஷ்மீரில் புதிய பயங்கரவாத அமைப்பை தொடங்கிய பாகிஸ்தான்

காஷ்மீரில் பயங்கரவாதத்தின் புதிய அமைப்பை பாகிஸ்தான் தொடங்கி உள்ளது.

Update: 2020-05-08 03:29 GMT
புதுடெல்லி

கடந்த சில வாரங்களாக ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்கள் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்பதாக ஒரு புதிய பயங்கரவாத குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்  முன்வருகிறது.

பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின்  மூன்று உயர் தலைவர்களால் இந்த அமைப்பு கட்டுப்படுத்தப்படுகிறது  என உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பாராளுமன்றம் ரத்து செய்து, மாநிலத்தை மத்திய அரசே  நிர்வகிக்கும் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக  பிரித்தது. அதன் பின்னர் இந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்  அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது

தெற்கு காஷ்மீருக்கான சஜாத் ஜாட், மத்திய காஷ்மீருக்கு காலித் மற்றும் வடக்கு காஷ்மீருக்கு ஹன்சலா அட்னான் இவர்களால் இந்த அமைப்பு நடத்தப்படுகிறது.

பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், உள்ளூர் ஆட்களை ஈர்ப்பதற்காக  தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் ஒரு வல்லமைமிக்க குழுவாக  அமைக்க திட்டமிடப்பட்டது. ஏப்ரல் தொடக்கத்தில் கெரான் பகுதியில்  ஐந்து பயங்கரவாதிகள் மற்றும் சம எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானில் உள்ள தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்  சமூக ஊடக மேலாளர்கள் பொறுப்பேற்றனர்.

இந்த வார இறுதியில் ஹண்ட்வாராவில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் பொறுப்பையும் இந்தக் குழு ஏற்றுக்கொண்டது. இந்த சண்டையில் பாதுகாப்புப் படையின் ஒரு இராணுவ கர்னல் உட்பட ஐந்து உயிர்களை இழக்க நேரிட்டது.

இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவரான பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த லஷ்கர் தளபதி ஹைதர் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டார். மற்றவர் உள்ளூர் பயங்கரவாதி, ஹண்ட்வாராவில் வசிப்பவர்.

மேலும் செய்திகள்