நாடு முழுவதும் ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து

நாடு முழுவதும் ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.

Update: 2020-05-14 04:43 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனை முன்னிட்டு மெயில்கள், மெட்ரோ, எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து பயணிகள் ரெயில்களும் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டன.  தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  வருகிற 17ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.  ஜூன் 30ந்தேதி வரையிலும் ஊரடங்குக்கு பிந்தைய சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும்.  முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்