ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை-புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம்

ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை என்று மத்திய சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

Update: 2020-05-19 08:37 GMT
புதுடெல்லி,

கொரோனா தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.  அதன்படி,  ஒரு அலுவலகத்தில் பணி புரியும் ஒன்றிரண்டு நபர்களுக்கு பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், அலுவலகத்தை முழுமையாக மூட வேண்டிய அவசியம் இல்லை. 

பெரிய அளவில் பாதிப்பு இருந்தால் 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அலுவலகத்தில் கிருமி நாசினிகளை தெளித்து விட்டு பணிகளை தொடரலாம் என்று வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்