புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெருக்கடி மோசமாக கையாளப்பட்டது -நிதி ஆயோக் தலைமை நிர்வாகி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெருக்கடி மோசமாக கையாளப்பட்டது. இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம் என நிதி ஆயோக் தலைமை நிர்வாகி கூறி உள்ளார்.

Update: 2020-05-23 03:11 GMT
புதுடெல்லி

இந்தியாவில் 1.18 லட்சத்திற்கும் அதிகமான பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,583 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 25 ந்தேதியில் இருந்து 4 வது கட்டமாக ஊரடங்க நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது.

மார்ச் மாத இறுதியில் மத்திய அரசு திடீரென நாடு தழுவிய ஊர்டங்கை  அறிவித்தபோது - நாடு முழுவதும் தொழிற்சாலைகள், கட்டுமான தளங்கள் மற்றும் செங்கல் சூளைகளில் பணிபுரியும் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு, தங்குமிடம் அல்லது வருமானம் இல்லாமல் தவித்தனர்.

ஊரடங்கால் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்கள் கிராமத்திற்கு கால்நடையாக சென்றனர். பல நூறு கிலோமீட்டர்க நடந்து சென்றனர்.சோர்வு அல்லது விபத்துக்களில், உடல்நிலை சரியில்லாமல் அல்லது வீட்டிற்கு செல்லும் வழியில் நுற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்து உள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் கால்நடையாக நடந்து செல்லும்அவலங்களை பார்த்த பின்னர்  சிறப்பு ரயில்களை இயக்கவும், பேருந்துகளை ஏற்றிச் செல்லவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

தற்போது மத்திய அரசு இதற்காக சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. மாநில அரசும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக் குழுவின் தலைமை நிர்வாகி அமிதாப் காந்த், ஊரடங்கு மற்றும் பரவலான வைரஸ் வெடிப்பைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக  செயல்பட்டபோதிலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெருக்கடி மோசமாக கையாளப்பட்டது. இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம் என கூறி உள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

"புலம்பெயர்ந்தோர் பிரச்சினை ஒரு சவாலாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம், ஏனெனில் பல ஆண்டுகளாக, நாம் சட்டங்களை உருவாக்கியுள்ளோம், இது பொருளாதாரத்தில் முறைசாரா தொழிலாளர்கள் பெருமளவில பெருக பெவழிவகுத்தது.

தொழிலாளர்களை நன்கு கவனித்துக்கொள்வதை உறுதி செய்வது மாநில அரசாங்கங்களின் பொறுப்பாகும். இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டில், மத்திய அரசுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பங்கு உள்ளது. இது ஒரு சவாலாக இருந்தது, அங்கு நாங்கள் மிகச் சிறப்பாக செய்திருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். மாநில, உள்ளூர், மாவட்ட  நிர்வாகமே ஒவ்வொரு தொழிலாளியையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் கீழ் ஏழைகள் வெளிப்படுத்தியுள்ள தீவிர அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

புலம்பெயர்ந்த தொழிலாளர் நெருக்கடியைக் கையாள்வது குறித்த விமர்சனங்களுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்