புயல் நிவாரண பணி: மேற்கு வங்காள அரசு ராணுவ உதவி கேட்கிறது

புயல் நிவாரண பணிகளுக்காக, மேற்கு வங்காள அரசு ராணுவ உதவி கேட்டுள்ளது.

Update: 2020-05-23 19:24 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் விரைவில் இயல்பு நிலையை கொண்டு வர மீட்பு, நிவாரண பணிகளுக்கு ராணுவத்தை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது. இதேபோல் ரெயில்வே, கொல்கத்தா துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்களின் உதவியையும் மேற்கு வங்காள அரசு நாடி இருக்கிறது.

மேலும் செய்திகள்