கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமி நரபலி கேட்டதாக ஒருவரை பலி கொடுத்த பூசாரி

கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமி நரபலி கேட்டதாக ஒருவரை கோவிலில் தலையை வெட்டி கொன்ற பூசாரி

Update: 2020-05-29 05:11 GMT
புவனேஸ்வர்

 கடவுள் கனவில் வந்து கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர நரபலி கேட்டதாக கூறி நபர் ஒருவரை கோவில் சன்னதியில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கின் அமைந்துள்ள பிராமணி தேவி கோவிலில் பூசாரியாக இருப்பவர் சன்சாரி ஓஜா(72).இவர் இரண்டு நாட்களுக்கு முன் 52 வயது நபரை கோவில் சன்னதிக்குள் அழைத்து வந்து கடவுள் முன்னிலையில் அவரின் தலையை துண்டாக வெட்டி பலி கொடுத்துள்ளார்.

பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.அப்போது போலீசாரிடம் சன்சாரி கூறுகையில், என் கனவில் பிராமணி தேவி அம்மன் வந்து நரபலி கேட்டார், அப்படி செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வரும் என கூறினார்.கடவுளே சொன்னதால் தான் இப்படி செய்தேன் என கூறி உள்ளார்.இதையடுத்து கைது செய்யப்பட்ட சன்சாரியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


கிராமத்தின் சுற்றளவில் ஒரு மா பழத்தோட்டம் தொடர்பாக இறந்தவருடன் பூசாரி நீண்டகாலமாக தகராறு செய்ததாக பந்தஹுதா கிராமத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

போலீஸ் டி.ஐ.ஜி மத்திய ரேஞ்ச் ஆஷிஷ்குமார் சிங் கூறியதாவது:-

சம்பவம் நடந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மறுநாள் காலையில் அவர் மீண்டும் நினைவுக்கு வந்தபோது அவர் சரணடைந்து குற்றத்தை ஏற்றுக்கொண்டார் என கூறினார்.

மேலும் செய்திகள்