உத்தரபிரதேசத்தில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து தப்பிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

உத்தரபிரதேசத்தில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து தப்பிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2020-05-29 21:54 GMT
புதுடெல்லி, 

உத்தரபிரதேச மாநிலம் பாண்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் பிரசாத் (வயது 35). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்றிருந்தார். கொரோனா நோய் பரவலை தொடர்ந்து கடந்த மே மாதம் 20-ந் தேதி ஊர் திரும்பினார். இதனை தொடர்ந்து அவரது கிராமத்தில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து தப்பினார். முகாம் அதிகாரிகள் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஜாகர்பூர் கிராமத்தில் உள்ள அவருடைய மாமியார் வீட்டில் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தண்டுவாரி போலீசார் விசாரணை நடத்தினர். மாமியார் வீட்டில் ரேஷன் பொருள் வாங்குவது தொடர்பாக அவருக்கும், அவருடைய மனைவி ராஜ்கலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக மாமியார் போலீசில் தெரிவித்துள்ளார். எனவே தற்கொலைக்கு இதுதான் காரணமாக இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்