டெல்லியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: யாரும் அச்சப்படத் தேவையில்லை - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-30 11:50 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இந்த நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜரிவால் இதுபற்றி இது குறித்து பேசியதாவது:

டெல்லியில் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இது கவலைக்குரிய விஷயம் என்றாலும், யாரும் அச்சப்படத் தேவையில்லை. நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். கொரோனா வைரஸைக் காட்டிலும், டெல்லி அரசு 4 மடங்கு முன்நோக்கி உள்ளது என்பதை உறுதிபடத் தெரிவிக்கிறேன். மொத்தம் பாதித்தோரில் வெறும் 2,100 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள் அவரவர் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர்.

இன்றைய தேதியில் 6,600 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. ஜூன் 5-இல் 9,500 படுக்கை வசதிகள் இருக்கும். டெல்லியில் மொத்தம் 17,386 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,142 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,846 பேர் குணமடைந்துள்ளனர், 398 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த நிரந்தர முழு அடைப்பே தீர்வாகாது என்பதால், அனைத்து முன்னெச்சரிக்கைகளுடன் வாழ்க்கை முறையை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்