கர்ப்பிணி யானையை கொன்ற விவகாரம்: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் - பினராயி விஜயன்

கர்ப்பிணி யானையை கொன்ற விவகாரத்தில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-04 12:44 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான கர்ப்பிணி யானைக்கு அன்னாச்சி பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், கேரளாவில் பட்டாசு கொடுத்து கர்ப்பிணி யானையை கொன்ற விவகாரம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த துயரத்தை சிலர் வெறுக்கத்தக்க பிரச்சாரமாக கட்டவிழ்த்துவிட்டதால் நாங்கள் வருத்தப்படுகிறோம்.
தவறான விளக்கங்கள் மற்றும் அரைகுறை உண்மைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பொய்கள் உண்மையை அழிக்க பயன்படுத்தப்பட்டன என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்