லடாக் எல்லையில் உயிரிழந்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்

லடாக் எல்லையில் உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை நாடு மறக்காது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-17 08:53 GMT
புதுடெல்லி,

லடாக் பகுதியில் நேற்று சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் லடாக் எல்லையில் உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை நாடு மறக்காது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், வீரர்களை இழந்தது வேதனையளிக்கிறது என்றும், நமது வீரர்கள் அளவில்லா தைரியத்தை வெளிப்படுத்தி, தங்களுடைய உயிரை தியாகம் செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

தியாக வீரர்களை இழந்த குடும்பங்களுக்கு நாடே துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இது போன்ற சிறந்த வீரர்களை பெற்றதற்கு நமது நாடு பெருமைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்