பாகிஸ்தான் விசாவுடன் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 200 இளைஞர்கள் மாயம் - உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 200 க்கும் மேற்பட்ட இளைச்சரிக்கைஞர்கள் பாகிஸ்தான் விசாவுடன் காணாமல் போயுள்ளதை அடுத்து உளவுத்துறை எச்சரிக்கை செய்து உள்ளது.

Update: 2020-06-26 08:20 GMT
புதுடெல்லி

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாகிஸ்தான் விசாவுடன் காணாமல் போயுள்ளதை அடுத்து உளவுத்துறை எச்சரிக்கை செய்து உள்ளது. அவர்களை வைத்து பாகிஸ்தான் 

ஜனவரி 2017 முதல் பாகிஸ்தான் தூதரகம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை  சேர்ந்த 399 இளைஞர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது, இதில் 218 பேர் எங்கே என்பது தெரியவில்லை.

இது குறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறும் போது  "பிப்ரவரி 14, 2019 இன் புல்வாமா தாக்குதலின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பயிற்சி, ஆயுதங்கள் மூலம் பாககிஸ்தான் இளைஞர்களை இலக்கு வைத்துள்ளது".

இளைஞர்களுக்கு பயங்கரவாத தாக்குதல்களுக்காக பாகிஸ்தான் யூனியன் பிரதேசத்தில் பயிற்சி அளித்து வருகிறது. ஆனால் அவர்கள் 'உள்ளூர் எதிர்ப்பு போராளிகள்' என்று தங்களை கூறிக்கொண்டனர்.

ஏப்ரல் 5 ம் தேதி பாதுகாப்புப் படையினர் ஐந்து பயங்கரவாதிகளை கைது செய்தனர்  ஐந்து பயங்கரவாதிகளில், மூன்று, ஆதில் ஹுசைன் மிர், உமர் நசீர் கான் மற்றும் சஜ்ஜாத் அகமது ஹர்ரே ஆகியோர் ஜம்மு காஷ்மீரை  சேர்ந்தவர்கள், பாகிஸ்தான் தூதரகம் வழங்கிய விசாவில் 2018 ஏப்ரலில் பாகிஸ்தானுக்கு அவர்கள் பயணம் செய்து இருந்தனர் என கூறி உள்ளது.

மேலும் செய்திகள்