நவிமும்பையில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல் - கமிஷனர் அறிவிப்பு

நவிமும்பையில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கமிஷனர் அன்னாசாகேப் மிசல் அறிவித்துள்ளார்.

Update: 2020-06-28 11:22 GMT
மும்பை,

ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது.

நவிமும்பையில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. முக்கியமாக பேலாப்பூர் துர்பே, வாஷி, கோபர்கைர்னே, கன்சோலி, ஐரோலி ஆகிய இடங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனை தொடர்ந்து அப்பகுதிகளில் நாளை முதல் தொடங்கி 7 நாட்கள் வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் அன்னாசாகேப் மிசல் தெரிவித்து உள்ளார். நேற்று முன்தினம் வரை நவிமும்பையில் 150 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்து உள்ளது. மேலும் 201 பேர் கொரோனாவினால் பலியாகி உள்ளனர்

மேலும் செய்திகள்