இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வரும் நேரத்தில், பாதிப்பிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Update: 2020-06-30 16:58 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,099 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை (59.07%) 3,34,821 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை மையங்கள் 1049 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இதில் 761 அரசு பரிசோதனை மையங்கள் 288 தனியார் பரிசோனை மையங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,10,292 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நாடு முழுவதும் செய்யப்பட்ட மொத்த பரிசோதனையின் எண்ணிக்கை 86,08,654 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்