சீனாவுடனான எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்

சீனா உடனான எல்லைத்தகராறு தீவிரமடைந்துள்ள நிலையில், ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இந்திய ராணுவம் கூடுதல் வலுப்பெறும் என கருதப்படுகிறது.

Update: 2020-07-02 08:02 GMT
புதுடெல்லி

இந்திய- சீன இடையேயான எல்லை மோதல் போக்கு கடந்த ஒரு மாதத்திற்கு  மேலாக நீடிக்கின்றன.

லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை

பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தையைத் நடைபெற்றாலும், மறுபுறம் காஷ்மீர் முதல் லடாக் எல்லை வரை இருநாட்டு படைகளும் ஆயுதங்களை குவிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய ராணுவத்துக்கு ஸ்பைஸ் 2000 ரக குண்டுகளை அதிக எண்ணிக்கையில் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த வகை குண்டுகள் 70 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இலக்குகளையும் தாக்கி அழிக்கும் திறன்கொண்டவை.

2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இந்திய விமானப்படை நுழைந்து துல்லியத்தாக்குதல் நடத்தி, ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் பயங்கரவாத முகாம்களை அழித்தது. அப்போது ஸ்பைஸ் 2000 ரக குண்டுகள் தான் பயன்படுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்