உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்: டெல்லியில் ஆளுநர் திறந்து வைத்தார்

10 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-05 08:11 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 10 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை ஆளுநர் அனில் பைஜால் திறந்து வைத்தார்.  உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் வெறும் 10 நாட்களில் இந்த சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் இந்த கொரோனா வைரஸ் சிகிச்சை மையம் உள்ளது. இதில் மிதமான மற்றும்  அறிகுறிகள் அற்ற கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள். முதலில் 1000 நோயாளிகள் இன்று அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த மையம் 1,700 அடி நீளம் 700 அடி அகலம் கொண்டது. சுமார் 20 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்டது. 200 அறைகளாகப் பிரிக்கப்பட்டு அறைக்கு 50 படுக்கைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்