ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகள்: இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து

இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

Update: 2020-07-29 13:54 GMT
புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,  ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகள்  இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

*இரவு நேர ஊரடங்கு ரத்து
*5-ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்படலாம்.
*கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு
*சமூக இடைவெளியுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்
*யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் அனுமதி

*திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
*பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது

*திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை நீட்டிப்பு
*பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை தொடர்கிறது

*உள்நாட்டில் குறைந்த அளவில் உள்நாட்டு விமானங்கள் இயங்க அனுமதி
*பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம்.
*வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்புபவர்களுக்காக மட்டும் வெளிநாட்டு விமானங்கள் இயக்க அனுமதி

மேலும் செய்திகள்