தெலுங்கானாவில் இன்று மேலும் 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு

தெலுங்கானாவில் இன்று மேலும் 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-31 09:17 GMT
ஹைதராபாத்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தெலுங்கானாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில நாட்களாக உச்சத்தை அடைந்து வருகிறது. பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானாவில் இன்று புதிதாக 1,986 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 62,703 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 519 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரேநாளில் 816 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 45,388 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 16,796 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 21,380 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 37 ஆயிரத்து 582 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்