காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் கண்டெடுப்பு

காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன.

Update: 2020-08-07 11:55 GMT
ஸ்ரீநகர்:

தெற்கு காஷ்மீரின் ஷோபியானின் ரெஷிபோரா கிராமத்தைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர் ஷாகிர் மன்சூர் பயங்கரவாதிகளால்  ஆகஸ்ட் 2 ஆம் தேதி கடத்தப்பட்டார். அதே நேரத்தில், எரிக்கப்பட்ட நிலையில் அவரது கார் குல்காம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ஒரு இராணுவ வீரரின் உடைகள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டன. காணாமல் போன வீரரின் உடைகள் அவரது வீட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில்  உள்ள மற்றொரு கிராமமான லாண்டூராவில் ஒரு பழத்தோட்டத்திற்கு அருகில் மூன்று வெவ்வேறு இடங்களில் காணப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

காணாமல் போன வீரரின் குடும்பத்தினர் துணிகள் ஷாகிருக்கு  சொந்தமானவைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அவர் கடத்தப்பட்ட நாளில் அவற்றை அணிந்திருந்ததாகவும் கூறி உள்ளனர்.

இதற்கிடையில், கடத்தப்பட்ட வீரரின் தந்தை மன்சூர் அகமது, ஷாகிர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருந்தால், அவரது இறுதி சடங்கிற்காக பயங்கரவாதிகள் அவரது உடலை திருப்பித் தர வேண்டும் என்றும், அவர் உயிருடன் இருந்தால், அவர்கள் அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

மேலும் செய்திகள்