தமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

தமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2020-08-11 00:15 GMT
சென்னை, 

தமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.


கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் மாநிலங்களில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்து வருகிறது.

கொரோனா பரவல் நிலை, ஊரடங்கு உத்தரவு, பொருளாதார மேம்பாடு, மக்களுக்கான நிவாரண உதவிகள் போன்றவை தொடர்பாக அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திரமோடி அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். அந்த வகையில், தற்போது கொரோனா அதிகமாக பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதில் தமிழகமும் உள்ளது.


இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்குகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார். அப்போது தமிழகத்துக்கு தேவையான கோரிக்கைகளை அவர் முன்வைப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்