இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக உயர்வடைந்து உள்ளது.

Update: 2020-08-13 08:51 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66 ஆயிரத்து 999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 942 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  23.96 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47,033 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 6,53,622 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புகளில் இருந்து 16 லட்சத்து 95 ஆயிரத்து 982 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்