உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
புதுடெல்லி,
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன்பின் ஆகஸ்ட் 14 ஆம் தேதி குணம் அடைந்தார். பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும், உடல் சோர்வு மற்றும் உடல் வலி இருந்ததால், கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த மாதம் 18-ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, ஆகஸ்ட் இறுதியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில், அமித்ஷா மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.