விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் இங்கு இருக்கிறோம் - பிரதமர் மோடி

விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-20 11:04 GMT
புதுடெல்லி,

மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். அதனை தொடர்ந்து எதிர்கட்சிகளின் அமளிக்கு நடுவே குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் மசோதாக்களும் மக்களைவையில் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் இன்று வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட போது, இந்த சட்டங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. எனினும் உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். இருப்பினும் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே உறுப்பினர்கள் ஆதரவை பெற்று குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் குறைந்தபட்ச ஆதார விலை, அரசே கொள்முதல் செய்யும் முறை ஆகியவை தொடரும் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் இங்கு இருக்கிறோம். அவர்களை ஆதரிப்பதற்கும் அவர்களின் தலைமுறையினருக்கு சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்