ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கு அக்டோபர் 12-ந்தேதிக்கு ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வந்தது.

Update: 2020-09-24 23:34 GMT
புதுடெல்லி,

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வந்தது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து 21 டாக்டர்கள் அடங்கிய நிபுணர் குழு மூலம் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தடை விதிக்க மறுத்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஆண்டு ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கு மீண்டும் நேற்று நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், சஞ்சீவ் கன்னா அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை அக்டோபர் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது தமிழக அரசின் இடைக்கால மனுவும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்